JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வர உள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 முறை அமிர்தசரஸ் பாஜக எம்.பியாக இருந்த சித்துவுக்கு கடந்த தேர்தலில் டிக்கெட் அளிக்கப்படவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த சித்துவுக்கு பாஜக மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாநில பாஜக கூட்டணி அரசுடன் அதிருப்தி போக்கை கடைபிடித்து வந்த சித்து திடீரென எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.அவரது மனைவி நவ்ஜோத்வரும் மாநில அரசின் முக்கிய பொறுப்பு ஒன்றில் உள்ளார். எனவே அவரும் விரைவில் ராஜினாமா செய்துவிடுவார் என கூறப்படுகிறது. இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் சேர உள்ளதாகவும் சித்து அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. திடீர் திருப்பமாக சித்து தமது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருப்பது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரியை சந்தித்து சித்து வழங்கிய ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதாக துணை தலைவர் குரியன் அவையில் அறிவுறுத்தியுள்ளார்.

ஹரித்துவாரில் அகற்றப்பட்ட திருவள்ளுவர் சிலையை 3 நாட்களுக்குள் மீண்டும் நிறுவப்படாவிட்டால் தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி அறிவித்துள்ளார்.

ஹரித்துவாரில் பாஜக எம்.பி. தருண் விஜய் முயற்சியில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. ஆனால் உத்தரகாண்ட் மாநில அரசு தற்போது அந்த சிலையை அகற்றி கருப்பு பாலித்தீனில் கட்டி வைத்துள்ளது.

இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், மூன்று தினத்திற்குள் எங்கள் ஐயன் திருவள்ளுவர் சிலை அங்கு உரிய இடத்தில் நிறுவப்பட வேண்டும்

இல்லையெனில் உரிய மரியாதையுடன் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும். இல்லையெனில் தமிழக பாஜக தலைமை அலுவலகம் முன்பு மானமுள்ள தமிழர்கள் எமது தலைமையில் தீக்குளிக்கும் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என எச்சரித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் சாலை மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்து 52 வயதான பெண்மணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திங்கட்கிழமை இரவு மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வரலஷ்மி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாலத்தில் இருந்து ஒரு பெண்மணி குதிப்பதைப் பார்த்த மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், இன்று காலை வரலஷ்மியின் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த பட்டதாரி மாணவர்களை மலேசியாவில் விற்ற ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்த பாண்டியராஜன்,சரத் பாபு ஆகியோரிடம் ஏஜெண்டுகளான ஜெய ராமன்,செங்குட்டுவன்,மார்ட்டின் மற்றும் கேரளாவை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஜார்ஜிடம் தலா 1 லட்சம் ருபாய்க்கு மேல் கொடுத்துள்ளனர்.

மேலும் பாண்டியராஜன் மற்றும் சரத் பாபு ஆகியோர் மலேசிய சென்றுள்ளனர்.அங்குள்ள உணவகத்தில் ஒரு அடிமை போல் நடத்தியுள்ளனர்.

இதனால் அவர்கள் உணவக உரிமையாளரிடம் அணுகிய போது,ஏஜெண்டுகள் உங்களை விற்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

கார்த்திக் மற்றும் சரத் பாபு ஆகியோர் தங்கள் பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்.

இதையறிந்த பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்,எஸ்.பி. விஜயேந்திர பிதாரி ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

அதை விசாரித்த காவல் துறையினர் அந்த 5 ஏஜெண்டுகளை கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் கர்பமாக இருந்த இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு போராடி வருகிறார் அந்த பெண்ணின் தந்தை

ஆப்கானின் கோர் மாகாணத்தில் குடியிருந்து வருகிறார் முகம்மது அஜாம் என்பவர் தமது 14 வயது மகள் சாரா என்பவரை அருகாமையில் உள்ள ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

அந்த குடும்பத்தினர் அஜாமிடம் இருந்து கடனாக அதிக பணம் கைப்பற்றியிருந்ததால், அவர்களின் சகோதரி ஒருவரை அஜாமுக்கு திருமணம் செய்து வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதனிடையே அதிக பணம் தருவதாக வேறொரு நபர் அவர்களிடம் வாக்கு அளித்ததால் அந்த பெண்ணை பணம் அதிகம் தரும் நபருக்கு மணம் முடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட பெண்மணி முகம்மது அஜாமுடன் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த குடும்பத்தினர் சாரா மீது தங்கள் கோபத்தை காட்டியுள்ளனர்.

கர்பமாகியிருந்த அவரை கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் நெருப்பு வைத்து சாராவை எரித்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அந்த இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் காபூல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற அஜாம் தமது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி காபூல் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோர் மாகாணத்தில் மட்டுமல்ல ஆப்கானின் ஒட்டுமொத்த பகுதியிலும் மனித உரிமை மீறல்களும், பாலியல் வன்கொடுமைகளும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…