JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் மிருகதனமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டபெண் சூளைமேடு பகுதியை சேர்ந்த சுவாதி(25-வயது)எனவும், அவர் செங்கல்பட்டில் உள்ள IT நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது செங்கல்பட்டு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி காத்திருந்த போது,கருப்பு உடை அணிந்து வந்த ஒரு இளைஞன், சுவாதியை மிருகதனமாக தாக்கி கத்தியால் குத்திக்கொன்று விட்ட தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பெண்ணின் உடலை கைப்பறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இச்சம்பவம் நுங்கம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொலிசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருமணத்திற்கு பின், இளம் வயது அம்மாவாக, சண்டை மற்றும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் நடித்த நதியாவுக்கு, தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதனால், 'சமுதாயத்தில், 40 வயது பெண்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன; அம்மாதிரி பிரச்னைகளை மையமாக வைத்து படமெடுத்து, என்னை போன்ற முன்னாள் கதாநாயகிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்...' என்று, தன் அபிமான இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார். அத்துடன், இந்திப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நதியா, இந்தியில், நடுத்தர வயது நடிகைகளுக்கு நடிக்க, போதுமான வாய்ப்பு கிடைத்து வருவதால், தற்போது, சில இயக்குனர்களை அணுகி, வாய்ப்பு கேட்டு வருகிறார்.

மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் தெரிவித்தார்.

பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஆற்றிய உரை:

கடந்த ஐந்தாண்டுகளாக மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்டு நாங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தோம். அதனால்தான், மக்கள் என்னை தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக ஆக்கியிருக்கிறார்கள்.

தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்ய எங்களை அனுமதித்திருக்கிறார்கள். அதற்காக தமிழக மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

மக்கள் நிம்மதியுடன் வாழ வகை செய்யும் விதமாக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனை அறிவார்ந்த தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர்.

அவ்வாறு மக்கள் நிம்மதி பெறும் வகையிலான நலத் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வந்ததால்தான், தமிழக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியிருக்கின்றனர்.

அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலான கொள்கைகளை ஆளுநர் உரையில் குறிப்பிட்டு இருக்கிறோம்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தொடர்ந்து வழங்கப்படுவதுடன், பயிர்க் கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

விவசாயத் தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் பசுக்களும், 7 லட்சம் பெண்களுக்கு ஆடுகளும் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மீன்பிடித் தடைக்கால நிவாரணம், தூண்டில் வளைவுகள் அமைப்பது, டீசலுக்கு விற்பனை வரி விலக்கு போன்ற மீனவர் நலன் காக்கும் திட்டங்கள் தொடர்ந்து செயலாக்கப்படும். பள்ளிக் கல்வித் துறையில் மாணவ-மாணவியருக்கு சீருடை, பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகின்றன. இத்தகைய முன்னோடித் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள காரணத்தால், தமிழகத்தில் பொது அமைதி பாதுகாக்கப்படுகிறது.

பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குற்ற நிகழ்வுகளே இல்லை என்ற நிலையை எட்ட முடியாது.

ஆனாலும், தமிழகத்தில் குற்ற நிகழ்வுகள் குறைந்து வருகின்றன. கடந்த 2010-ஆம் ஆண்டில் 1,715 ஆக இருந்த கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,641 ஆகக் குறைந்துள்ளது.

ஆதாயக் கொலைகள், கொள்ளை வழக்குகள், கொலை வழக்குகள் உள்ளிட்ட சொத்து தொடர்பான வழக்குகளின் சதவீதமும் குறைந்துள்ளன.

எனவே, குற்றங்களின் எண்ணிக்கை, குற்ற விகிதத்தின் அடிப்படையில் திமுக ஆட்சியுடன் ஒப்பிடும் போது, இப்போது குறைந்தே உள்ளது என்றார் முதல்வர் ஜெயலலிதா. 

பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது...

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016 00:00

பிரிகிறது பிரிட்டன் - விளைவுகள் ? ? ?

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரிட்டன் இருக்கவேண்டுமா , வெளியேற வேண்டுமா என்பது குறித்து பிரிட்டிஷ் மக்களின் கருத்தறிய நேற்று வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி , வெளியேற வேண்டும் என்ற கருத்திற்கே அதிக ஆதரவு இருக்கிறது.

கிட்டத்தட்ட 4 சதவிகித அளவில் முன்னிலை வகிக்கிறது. இன்னும்  30,000  ஓட்டுக்கள் அதற்கு கிடைப்பின் , பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்து தனி ஆவர்த்தனம் வாசித்து விடும்.  

382 கோட்டங்களில் 374  கோட்டங்களின் முடிவுகள் வெளிவந்துவிட்டன. இந்த வரிகள் பதிவாகும் நேரம் ‘வெளியேற வேண்டும்’ என்ற விருப்பம் 11 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

 

இறுதி வாக்கெடுப்பு முடிவு , போகும் போக்கை ஆராய்ந்தால் பிரிட்டன் தனி ஆவர்த்தனம் வாசித்து விடும் என்றே தோன்றுகிறது. இனி வரும் ஓட்டு எண்ணிக்கையில் பெரிய மாற்றங்கள் தோன்ற போவதில்லை.

தனி ஆவர்த்தனம்தான்.

தன்னை தனிமை படுத்திக் கொண்டு விட்டது பிரிட்டன். இதனால் விளையும் சாதக, பாதகங்கள் உலகெங்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்குமா பிரிட்டன் ?

ஐரோப்பிய யூனியனுடன் பிரித்தானியா இணைந்திருப்பதா அல்லது வெளியேறுவதா என்பது தொடர்பான வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது வரையிலும் வெளியான முடிவுகளை வைத்து பார்க்கும் போது, பெரும்பாலான மக்கள் வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர்...

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…