JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்,வீராங்கனைகளை வழியனுப்பும் விழாவில் இந்தி நடிகர் சல்மான் கான்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டனர்.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் 5 ம் திகதி முதல் 21 ம் திகதி வரை நடைபெறுகிறது.தொடர்ந்து செப்டம்பர் 7 ம் திகதி முதல் 18 ம் திகதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடை பெற உள்ளது.

இதில் பங்கேற்க இந்திய சார்பில் 121 வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது.இதில் இந்தியாவின் ஒலிம்பிக் தூதர்களான இந்தி நடிகர் சல்மான்கான்,இசையமைபாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயால் கலந்து கொண்டனர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற கோரி செய்யப்பட்ட மனுதாக்கலை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 2014 ம் ஆண்டு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது.

இது குறித்து வி.கே.நாஸ்வா என்பவர் டெண்டுல்கர் விளம்பரங்களில் நடித்து வருகிறார்,மேலும் அவரை பாரத ரத்னாவாக சித்தரித்து சில புத்தகங்கள் வெளிவருவதால் பாரத ரத்னா விருதுக்கு களங்கம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, விசாரணையில் சச்சின் டெண்டுல்கரை யாரோ ஒரு நபர் பாரத ரத்னா என்று கூறி புத்தகம் எழுதுவதற்கு, அவர் எப்படி பொறுப்பாக முடியும்.

பாரத ரத்னா விருது பெற்றவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி இந்த வழக்கை தீபக் மிஸ்ரா மற்றும் சந்திர சூட் ஆகிய அமர்வு கொண்ட நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2016 00:00

கோஹ்லி யாரை களமிறக்குவார்?

இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்க ஷிகார் தாவான், லொகேஷ் ராகுல் ஆகிய இருவரில் யாருக்கு இடம் கொடுப்பது என்ற கேள்வி அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு எழுந்துள்ளது.

இந்திய அணி மேற்கிந்திய தீவில் சுற்று பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இதற்கான முதல் போட்டி வருகிற 21 ம் திகதி ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது.

இதில் இந்திய அணியின் துவக்க துடுப்பாட்டக்காரர்களாக மூன்று பேர் உள்ளனர். முரளி விஜய் இடம் உறுதியாகியுள்ளது,அவருக்கு ஜோடியாக யாரை விளையாட வைப்பது என்பது தற்போது இந்திய அணியில் பெரும் குழப்பமாக உள்ளது.

மேலும் இடது கை துடுப்பாட்டக்காரரான ஷிகர் தவான் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை.தற்போது மேற்கிந்திய தீவில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளிலும் (50.9) ஓட்டங்கள் தான் எடுத்தார்.

நடந்து முடிந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் லோகஷ் ராகுலா 2 அரைசதங்கள் அடித்தார். மேலும் ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார்.

இதன் காரணமாக லோகஷ் ராகுலா அல்லது ஷிகார் தாவான் என்ற குழப்பம் நிலவுகிறது.

மேலும் இந்திய தேர்வாளர்கள் அனைவரும் ஷிகார் தவானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிய பசிபிக் தொழில்முறை குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் விஜேந்தர் சிங்கிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த தொழில்முறை குத்துச்சண்டையில் இந்தியாவின் விஜேந்தர்சிங், அவுஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பை வீழ்த்தி ஆசிய பசிபிக் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த போட்டியின் போது விஜேந்தர் சிங் இந்திய தேசியக் கொடியை அவமதித்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வசுந்தரா என்கிளேவ் பகுதியை சேர்ந்த Ullhas என்பவரே விஜேந்தருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில், ஆசிய பசிபிக் குத்துச் சண்டை போட்டியின் போது விஜேந்தர் சிங் இந்தியாவின் மூவர்ணக் கொடி நிறத்தில் ஷார்ட்ஸ் அணிந்து இருந்ததாகவும்.

இதன் மூலம் அவர் இந்திய கொடி விதியை மீறியுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற கொடி விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆலோசனை படியே புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் தர போட்டியில் அதிவேக இரட்டை சதமடித்த முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரியின் சாதனையை இங்கிலாந்து வீரர் டொனால்டு சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் ‘கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2’ முதல் தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

நான்கு நாட்கள் கொண்ட இந்த தொடரின் ஒரு போட்டியில் கிளமோர்கன் - டெர்பிஷைர் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற கிளமோர்கன் அணி முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்தது. அந்த அணியில் 5-வது நபராக களம் இறங்கிய 19 வயது இளம் வீரரான அனேயுரின் டொனால்டு 80 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் அடுத்த 43 பந்தில் சதம் விளாசி 123 பந்தில் இரட்டை சதம் அடித்தார்.

122 பந்தில் 194 ரன்கள் எடுத்திருந்த அவர், அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கி இரட்டை சதத்தை பதிவு செய்தார். 100, 150 மற்றும் 200 ஆகியவற்றை சிக்ஸ் அடித்து கடந்து அசத்தினார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 136 பந்தில் 26 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 234 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ரவி சாஸ்திரி 1985-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் தர போட்டியில் 123 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இதுதான் முதல் தர போட்டியி்ல் அதிவேக இரட்டை சதமாக இருந்து வருகிறது. இந்த சாதனையை டொனால்டு தற்போது சமன் செய்துள்ளார்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…