JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ஆந்திர அரசு பிரச்சினையில் ஈடுபடும் போதெல்லாம் ஜெயலலிதா மவுனமாக இருப்பது ஏன்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆந்திர வனத்துறையால் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் ஜெயலலிதா மவுனமாக இருந்தார் என்றும், ஆந்திர முதல்வரையோ, பிரதமரையோ ஜெயலலிதா ஏன் சந்தித்து பேசக் கூடாது எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து பா.ஜனதாவில் அதிருப்தியில் இருந்தார். பாராளுமன்ற தேர்தலில் தனது அமிர்தசரஸ் தொகுதி யை அருண்ஜெட்லிக்காக விட்டுக் கொடுத்தார். அது முதல் அதிருப்தியில் இருந்த அவருக்கு மேல்-சபை எம்.பி பதவி தந்தது என்றாலும் பஞ்சாப் மாநிலத்தில் எம்.எல்.ஏ வாக உள்ள அவரது மனைவி நவ்ஜோதி கவுருக்கும் அகாலி தள கட்சிக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சித்து நேற்று திடீர் என்று மேல்-சபை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர திட்டமிட்டுள்ளார்.இது தொடர்பாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் கேட்ட போது, சித்து எங்கள் கட்சி யில் இணைந்தால் வரவேற்போம் என்று தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் சித்து ஆம் ஆத்மி கட்சியில் சேருகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சித்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பிறகு அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. சித்து பா.ஜனதாவில் இருந்த போது அவரை கெஜ்ரிவால் பலமுறை சந்தித்து பேசிய விவரம் தற்போது வெளிவந்துள்ளது. எனவே சித்துவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து அவர் தலைமையில்  தேர்த லை சந்திக்க கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளது தெரிய வருகிறது.

ஆனால் நவ்ஜோத் சிங் சித்து இந்த விவகாரத்தில் மவுனமாக உள்ளார். ஆனால் இது குறித்து  அவரது மனைவி  நவ்ஜோத் கவுர் சித்து  கூறும் போது :-

ஆமாம் சித்து தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.ஆனால் நான் செய்யவில்லை. அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததில் ஒரு அர்த்தமுள்ளது.அவருக்கு இதில் ஒரு தெளிவான பார்வை உள்ளது. அவர் பஞ்சாப்புக்கு சேவை செய்வார். அவர் பஞ்சாப்புக்கு எதிராக எந்த வழியையும் தேர்வு செய்யமாட்டார்.என கூறினார்

பிரித்தானியாவில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரயில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

ஐக்கிய அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் தமது மகனும் இளவரசருமான ஷேக் ஹம்தான் பின் முகமது உடன் இணைந்து லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சுரங்க ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கொளுத்தும் வெயில் கூட்ட நெரிசல் எதையும் பொருட்ப்படுத்தாமல் பொதுமக்களுடன் இணைந்து இருவரும் பயணம் மேற்கொண்டது சமூக வலைப்பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது அவ்வப்போது புகைப்படங்களெடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டிருந்தார். இந்த ரயில் பயணத்தின் சிறப்பு என்னவெனில் இருவருமே அரேபிய உடையில் இல்லாமல் சாதாரண உடையில் பொதுமக்களுடன் இணைந்து பயணம் மேற்கொண்டதுதான்.

ஷேக் முகமது பின் ரஷீத்தின் சொத்து மதிப்பு 4 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என கூறப்படுகிறது.

பாரம்பரிய அரபு நாட்டு உடையுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ளும் நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதால், அரேபிய சுற்றுலாப்பயணிகளை அந்தந்த நாட்டுக்கேற்ற உடைகளை பயன்படுத்த ஐக்கிய அமீரகம் கோரியுள்ளது.

 

 

 

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2016 00:00

மது: தேசிய நெடுஞ்சாலையில் 6,755 பேர் பலி

து அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 6755 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

பெரும்பாலான விபத்துக்கள் மதுவினாலே ஏற்படுகிறது. மதுக்கடைகளை தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஒட்டினால், ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. இருந்தாலும் மதுவினால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

டெல்லி மேல்சபையில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் பற்றி, உறுப்பினர் ஹரிவன்ஷ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலுரைத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனன்:

கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டதில் 6,755 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிர் இழப்புகள் பற்றியும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் வைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதிவியேற்றுள்ள தெரேசா மே. முதல் உத்தியோகபூர்வ பயணமாக பிரான்சுக்கு விஜயம் செய்யவிருக்கிறார்.

எதிர்வரும் யூலை 21ம் திகதி பாரிஸ் செல்லும் அவர் அங்கு பிரான்ஸ் ஜனாதிபதி ஒலாந்தை சந்தித்து பேசவுள்ளார்.

ஓலாந்துடனான சந்திப்பில் பயங்கரவாதம் குறித்தும், இரு நாட்டு பொருளாதார கொள்கைகள் குறித்தும் உரையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரான்சின் நைஸ் நகரில் தாக்குதல் இடம்பெற்றபோது, தெரேசா மே ஆதரவு குரல் எழுப்பியிருந்தார். பிரெஞ்சு அரசுக்கும் மக்களுக்கும் எது தேவையோ அதை செய்வோம். பயங்கரவாதத்துக்கு எதிராக போராட தோள் கொடுப்போம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இப்பயணத்தின் போது, வெளிப்புற பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், பிரித்தானியா வெளியேற்றத்தை செயல்படுத்துதல் மற்றும் பிரான்ஸ்-பிரிட்டிஷ் உறவுகளின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து தெரேசா மே உரையாட இருப்பதாக கூறப்படுகிறது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…