JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளை காவல்துறை துவக்கியுள்ளது.அதன்படி, தற்போது புழல் சிறையில் உள்ள ராம்குமாரை திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.அடையாள அணிவகுப்புக்குப் பிறகு ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது கொலை வழக்கில் மேலும் ஆதாரங்களை திருட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.ஏற்கனவே, ராம்குமாருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.தற்போது ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு, ஷிப்ட் முறையில் 3 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ராணுவத்துக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வெளிநாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கொழும்பு நகர் அருகே புத்த மதத் துறவிகளின் நிகழ்ச்சியொன்றில் அதிபர் சிறீசேனா, வெள்ளிக்கிழமை பங்கேற்றார். அவர்கள் முன்பு அவர் பேசியதாவது: இலங்கை இறுதிக்கட்டப் போர் குறித்து எங்கு வேண்டுமானாலும் விவாதிக்கப்படலாம்.

ஆனால், இலங்கையின் அதிபராக நான் இருக்கும் வரை, வெளிநாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளை உள்நாடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விசாரிப்பதற்காக அனுமதிக்க மாட்டேன். நாட்டின் சுதந்திரத்துக்கும், இறையாண்மைக்கும் எதிராக எந்தச் செயலையும் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று சிறீசேனா பேசினார்.

முன்னதாக, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சர்வதேச நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி, இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்தது.

அந்நாட்டில் 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில், பொதுமக்கள் உள்பட 40,000 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் நேற்று இரவு துவங்கின. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலாவது அணு உலையில் தற்போது முழுஅளவான ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது அணு உலையில் மின்உற்பத்தியை துவங்குவதற்கு முந்தைய ஒவ்வொரு நிலையையும் ஏ.இ.ஆர்.பி., எனப்படும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரியப்படுத்திவந்தனர்.

அண்மையில் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளும் ஆய்வு செய்து மின் உற்பத்தியை மேற்கொள்ள அனுமதி வழங்கினர். ஜூலை 1, 2 தேதிகளில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களது ஆய்வறிக்கை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

அமைச்சகத்தின் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டிருப்பதால் மின்உற்பத்திக்கு அனுமதி வழங்கினர். இதனையடுத்து நேற்று இரவு 7:52 மணிக்கு கிரிட்டிக்காலிட்டி எனப்படும் அணுப்பிளவுக்கான ஆயத்த பணிகள் துவங்கின.

போரான் அமிலம் நிரப்பப்பட்ட அணு உலையில், செறியூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் உள்ளன. இதில் போரான் அமிலத்தின் தன்மையை குறைப்பதற்காக தண்ணீர் ஊற்றப்படுகிறது. தண்ணீரின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க ஒரு லிட்டரில் 17.4 கிராம் அளவுள்ள போரான், படிப்படியாக 7.4 கிராமாக குறையும்.

அவ்வாறு குறையும் போது, நியூட்ரான் துகள்கள் செயல்பட துவங்கும். நியூட்ரான் துகள், யுரேனியத்தை பிளக்க துவங்குகிறது. நேற்று இரவு துவங்கி 48 மணிநேரத்திற்கு பிறகு அதாவது ஜூலை 10 மாலையில் 'கிரிட்டிகாலிட்டி' எனப்படும் அணுப்பிளவு துவங்கும்.

ஒரு நியூட்ரான், ஒரு யுரேனியத்தை பிளந்தால் அதில் இருந்து, இரண்டு நியூட்ரான் ஏற்படும். இப்படி படிப்படியாக அணுப்பிளவு ஏற்படும்போது வெப்பமும் ஏற்படும். அந்த வெப்பத்தால், ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம் டர்பன்களை சுழலச்செய்து மின் உற்பத்தி கிடைக்கிறது.

ஆரம்பத்தில் 100 மெகாவாட்டில் துவங்கி படிப்படியாக முழு அளவான ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை எட்டும். இந்த மின்சாரமும் நெல்லை மாவட்டம் அபிசேகப்பட்டியில் அமைந்துள்ள கிரிட் மையத்தின் மூலம் மத்திய தொகுப்பிற்கு அனுப்பப்படும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த இரண்டாவது அணு உலையில் மின்உற்பத்தி துவங்குவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இதனை முறைப்படி துவக்கிவைக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 49 நாள் சுற்றுப்பயணமாக வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ளது. அங்கு 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் ஆடுகிறது.

இதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி ஆட்டம் பாசெட்ரே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கும், அங்குள்ள சூழலுக்கும் தங்களை தயார்படுத்திக்கொள்ள பயிற்சி களம் அருமையான வாய்ப்பாகும்.

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நீண்ட நேரம் பந்து வீசும் நிலைக்கு வந்து விட்டாரா? என்பதை சோதித்து பார்க்க பயிற்சியாளர் அனில் கும்பிளே ஆர்வமாக உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவன் அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் லியோன் ஜான்சன், ஜெர்மைன் பிளாக்வுட், ராஜேந்திர சந்திரிகா, ஷேன் டாவ்ரிச், ஷாய் ஹோப், ஜோமல் வாரிகன் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் ஆடிய அனுபவம் பெற்றவர்கள். இதனால் பயிற்சி ஆட்டமும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்ஸ்மேன்கள் பொறுமையாக நிலைத்து நின்று ஆட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் 75 முதல் 80 பந்துகள் தாக்குப்பிடித்து ஆட வேண்டும் என்று பயிற்சியாளர் அறிவுறுத்துவார் என்று தெரிகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தான் கடும் நெருக்கடியில் இருக்கிறார்.

அவர் திறமையை காட்ட தவறினால், இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் அவரது இடத்தை தட்டிப்பறித்து விடுவார்.

இந்த பயிற்சி ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றதும் இந்திய வீரர்கள் ஜாலியாக பீச் வாலிபால் ஆடினார்கள். யோகா பயிற்சியும் மேற்கொண்டனர். தொடர்ந்து பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் ஒரு நாளுக்கு முன்பே கைது செய்யப்பட்டார் என்றும், அவர் பேசக்கூடாது என்பதற்காக போலீசாரே அவரின் கழுத்தில் அறுத்துள்ளனர் என்று வழக்கறிஞர் ராமராஜ் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் கைதான விவகாரத்தில் நாளுக்கொரு செய்தி வெளியாகி வருகிறது. பல திடுக்கிடும் மர்மங்களும், திருப்பங்களும் இந்த வழக்கில் இணைந்துள்ளது போலவே தெரிகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை சமீபத்தில் அவரின் உறவினரும், வழக்கறிஞருமான ராமராஜ் சந்தித்து பேசியுள்ளார். அதன்பின் அவர் பல பகீர் தகவலகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். சுவாதி கொலை வழக்கில் போலீசார் நடந்து கொண்ட விதத்தை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.

போலீசார் கூறியது ராம்குமாரை அன்று இரவு கைது செய்யப்படவில்லை. முதல் நாளே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு ஒரு இடத்தில் வைத்து அவரை விசாரணை செய்துள்ளனர். “அவரது கழுத்தை அரை வட்ட வடிவில் அறுத்துள்ளனர். அவர் பேசக்கூடாது என்பதற்காக அப்படி செய்துள்ளனர்.

ரத்தம் வடிய மயங்கிய நிலையில், அவரை ஊருக்குள் அழைத்து வந்துள்ளனர். மின்சாரத்தை நிறுத்திவிட்டு, ராம்குமாரின் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். வெளியே வந்த தந்தையிடம் “ இது உன் மகனா?. கழுத்தை அறுத்துக் கொண்டான்” என்று கூறியுள்ளனர். ராம்குமாரை கொல்வதுதான் போலீசாரின் நோக்கம். ஆனால், அப்படி செய்தால் ஊர்மக்கள் அவர்களை சும்மா விடமாட்டார்கள் என்று தெரிந்து விட்டு விட்டனர்.

இதையெல்லாம் மறைப்பதற்காக அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என்று ஊடகங்களிடம் கூறியுள்ளனர். எந்த நேரம் தனக்கு என்ன ஆகுமோ என்ற பயத்திலேயே ராம்குமார் இருந்துள்ளார். இப்போதும் இருக்கிறார்,

அவருக்கு என்ன நடந்தாலும் போலீசார்தான் பொறுப்பு. நெல்லையில் அவர் அளித்த வாக்குமூலம் அவருடயது அல்ல. இந்த வழக்கில், உண்மையான தகவல்கள் விரைவில் வெளிவரும்” என்று அவர் கூறினார். 

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…