JoomlaLock.com All4Share.net

Background Video

தொழில்நுட்பம் / அறிவியல்

மாணவர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு : தமிழகத்தில் முதன்முறையாக பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளியில் அறிமுகம்

தமிழகத்தில் முதன்முறையாக பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு அடுத்ததாக மாணவர்களுக்கும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டம் நடைமுறையில் இருப்பதால் தமிழக அளவில் முதன்முறையாக ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை ஜனவரி 12ம் தேதி அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இதன்படி மாவட்ட அளவில் மொத்தமுள்ள 85 அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 38 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 10 அரசு உயர் நிலைப்பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, 1 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி என 50 பள்ளிகளில் மட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக சம்மந்தப்பட்ட பள்ளி கணினி ஆசிரியர்களுக்கு, கணினி இயக்குபவர்களுக்கு தேசியத் தகவல் மைய ஊழியர்களால் செயல்முறை விளக்கம் தரப்பட்டது. இந்நிலையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு தமிழக அளவில் முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் சோதனை அடிப்படையில் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப் பட்ட திட்டம், தற்போது 100 மாணவர்களுக்குக் கீழுள்ள தம்பிரான்பட்டி, முருக்கன்குடி, வரகூர் அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 200 மாணவர்களுக்குக் கீழுள்ள காடூர், கூடலூர், வடக்குமாதவி அரசுஉயர்நிலைப்பள்ளிகளிலும், 300 பேருக்கு மேலுள்ள துங்கபுரம், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் என 8 பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு கொண்டுவரப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் முனுசாமி தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழகத்தில் முதன்முறையாக ஆசிரியர்களுக்கு அடுத்ததாக மாணவர்களுக்கென பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது. இதற்காக கட்டைவிரல்ரேகை பதிவு செய்த நேரத்தைக் கொண்டு தலைமை ஆசிரியர், ஆசிரியர், அலுவலர்களோடு இனி மாணவர்களின் தாமதத்தையும் கண்காணிக்க முடியும். தொடர்ந்து விடுப்பெடுத்த, பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து நல்வழிப்படுத்த முடியும் என்றார்.

Read 563 times Last modified on Wednesday, 06 July 2016 07:37
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…